Sunday, October 3, 2010

எனது பார்வையில் எந்திரன் (விமர்சனம்)

Oct 2,2010
அதிகாலை எனது மைத்துனரிடம் எந்திரன் பார்ப்போமா என்று கேட்டபோது அவர் எனக்கு சொன்னது “வேற வேலை இல்லை 60 வயது கிழவனை பார்க்க”. இதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் என்மனம் சொன்னது சங்கர் ஏதாவது Magical வைத்திருப்பார் என்று. அவரின் பழைய படைப்புக்கள் எல்லாம் நல்லாத என்றால் இல்லை என்றும் கூறமுடியாது ஆம் என்றும் கூறமுடியாது. இருப்பினும் இந்திய சினிமாவில் பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு வடிவம் கொடுத்தவர் சங்கர். அது மட்டும் அல்ல, திரைக் கதையில் புதிய யுத்தி, ஒவ்வொரு படத்திலும் புதிய அணுகுமுறை. குறிப்பாக சமூக சிந்தனை கருத்துக்களை எல்லா படைப்புகளிலும் வைத்துள்ளார். இருப்பினும் சிலபடைப்புகளில் அவரால் சரியாக வெளிக்கொணர முடியவில்லை என்பது தான் உண்மை. அவரின் படைப்பில் முதல்வன் ஒரு முதல் நிலை படைப்பு. அ தில் அவரின் கற்பனை சக்தியை அறியக்கூடியதாக இருந்தது.

எந்திரன் எனது பார்வையில் ஒரு சிறந்தபடைப்பு என்று தான் கூறுவேன். தமிழ் சினிமா காதல்,வாழ்வியல்,குடும்பம், உறவு,குழுச்சண்டை என்று சிக்கி தவித்துக்கொண்டு போகும் போது புதிய பாதையை காட்டி இருக்கிறார் என்று கூறலாம்.படத்தில் தொழில் நுட்பத்தில் எதுவித குறையும் கூறமுடியாது.

திரைக்கதையில் அவர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது, முதற் பகுதியில் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக நகர்ந்தது என்று கூறலாம். இருப்பினும் வசனங்களை இன்னும் நேர்த்தியாக நகர்த்தி இருக்கலாம், திரைக்கதை எழுதிய சுயாதாவின் மரணம் படத்தில் தெரிகிறது.வசனங்களில் வீரியம், பகிடி, திருப்பம் குறைவாகவே தெரிகிறது. இரண்டாம் பகுதியில் படம் மிகவும் நீண்டு விட்டது போல இருக்கிறது. ஒட்டாவாவில் பார்வையாளர்கள் பட த்திற்கிடையே பேச ஆரம்பித்து விட்டார்கள். இது நிகழ்வதின் காரணம் திரைக் கதையின் நேர்த்தி இன்மை என்று கூறலாம். இருப்பினும் சங்கருக்கு கதையை சொல்வதற்கு பல சம்பவங்கள் தேவை பட்டு இருப்பதால் இது நீண்டு விட்டது.குறிப்பாக பாடல்களை திணித்து இருக்கிறார்.


படத்தின் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்திய சங்கர் ஏன் நடிகர்களை தேர்வு செய்யும் போது கவனம் செலுத்தாமல் விட்டார் என்பது எல்லார் மனதிலும் உள்ள கேள்வி. அதற்கு எனது பார்வையில் தெரிவது ஒன்று மட்டும் தான். வியாபாரம். குறிப்பாக ரஜினி. இவருக்கு இருக்கும் பார்வையாளர்கள் தான் இப்படதின் தயாரிப்புக்கு பக்கபலமாக இருக்க முடியும். பட த்தின் இறுதி கட்டங்களில் எந்திரன் பாத்திரத்தில் அவரின் நடிப்பின் திறனை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் என்றால் அது மிகை ஆகாது. இருப்பினும் அவரின் வயது இதற்கு ஒத்துவராமை நன்றாக தெரிகிறது ( பார்வையாளர்களின் கவலையும் இது தான்).

எந்திரன் மொத்தத்தில் பார்த்து ரசிக்கவேண்டிய படம், வெளி நாட்டு படங்களுடன் ஒப்பிடும் போது இது அதற்கு நிகர் ஆனது தான் (வெளி நாட்டு படங்கள்உடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த பொருட் செலவில்), வெளிநாட்டு படங்களை விட அதிக சமுக அக்கறை உண்டு என்றுதான் கூறவேன்டும் ஒரு Fantasy Science fiction film எடுக்கும் போது எதையும் பற்றி கவலை படத்தேவை இல்லை. வெறும் கற்பனையில் தான் படத்தை நகர்த்துவது நடை முறை. இருப்பினும் சங்கர் பல இடங்களில் சமுக சீர்கேடுகளையும், விஞ்ஞான உலகில் நடக்கும் போட்டி பொறாமைகளையும் காட்டியது பாராட்டுதற்கு உரியது. படத்தை பற்றி விபரமாக விமர்சனம் வைக்க விரும்ப வில்லை, ஏனென்றால் பலர் இப்படம் பார்க்கவேண்டும் என்பதால்.

எனது பார்வையில் எல்லோரும் இப்படத்தை திரைஅரங்குகளில் பார்க்கவேண்டும்.

3 comments:

  1. இன்றைய சில சினிமா விமர்சனங்கள் வெறும் விசனங்களாக அமைந்து விடுகிறது. உங்கள் விமர்சனம் நன்றாக அமைந்திருக்கிறது. சங்கரின் அற்புதமான சமூக அக்கறை கொண்ட படம் இந்தியன், முதல்வன். தமிழ் திரையுலகத்திற்கு அவரின் பணி மிக அவசியம். தோழரே, உங்கள் விமர்சனம் முற்றுப் பெறவில்லை. சுருக்கமாக எழுத வேண்டும் என்று கருத்தை சுருக்கி விட்டீரோ? ரஹ்மானின் இசை பற்றி வாயே திறக்கவில்லை. ஐசின் அழகு உமக்கென்ன குமட்டலோ? சண்டைகள் என்றால் அப்படியென்ன பயம்?...............முத்தம், அரவணைப்பு இல்லாத காதல் போல, பெண்கள் இல்லாத சபை போல உள்ளது உங்கள் விமர்சனம். வசன நடையில் ஆங்காங்கே சில இடறல்கள் இருந்தாலும் உங்கள் இலகு தமிழ் இனிக்கிறது. சில விடயங்கள் விடுபட்டாலும் கருத்துக்கள் விடுபடவில்லை. கருத்தில் கண்ணாக இருந்திருக்கிறீர். வெறும் மழைத்தூறல்களாக நின்று விடாமல் ஆறாக ஓடட்டும். தமிழுலகு செழிப்படையட்டும். தொடரட்டும் உங்கள் தமிழ் வேட்டை. மலரட்டும் நல்ல படைப்புக்கள். என் மனவுமர்ந்த வாழ்த்துக்கள். தமிழ்த்தாய் உங்களையும் ஆசீர்வாதிப்பாராக!

    முகம் தெரியாத நட்புடன்,
    சிவசித்ரா

    ReplyDelete
  2. பார்வை360 நன்றாக அமைந்துள்ளது. வருகின்ற சனிக்கிழமை மாலை ஒட்டாவாவில் “சுருதிலயம் 2010” நடைபெறவுள்ளதாக அறிந்தேன். உங்கள் பார்வையை அங்கும் எதிர்பார்க்கிறோம்.
    வேகமாக ஓடுபவன் அதிகமாக உயரம் தாண்டுகிறான்.
    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    அ.பகீரதன்

    ReplyDelete
  3. பார்வை360:-
    உங்களுடைய அனுபவத்தில் சக்ஸஸ் ஃபார்முலா என்று எதைச் சொல்லலாம்?

    “நேர்மைதான் வெற்றியின் ரகசியம். முன்பு இதுதான் என் எண்ணமாக இருந்தது.எதையும் யோசித்துக் கொண்டே காலம் தள்ளுவதைவிட செயலில் இறங்கிப்பார்.எதுவும் சுலபம்தான் என்ற எண்ணம் இப்போது வந்திருக்கிறது.மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அண்ணாந்து பார்த்தால் உயரமாகத் தெரியும்.அதை நினைத்து பயப்படாமல், அதில் ஏறுவதற்கான சரியான முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினால் போதுமானது. இறுதியில் சிகரத்தை எட்டிவிட முடியும்.’’
    ->ஷங்கர்<-

    ReplyDelete