Saturday, October 2, 2010

மனிதன்

1. மனிதனை மனிதனாக மதிப்பவன் தான் மனிதன்.

மாற்ற வேண்டும்! நாம் பலவற்றை மாற்றவேண்டும்!
உலகை மாற்ற வேண்டும், ஊரை மாற்றவேண்டும், எல்லா உள்ளங்களையும் நல்ல உள்ளங்களாக மாற்றவேண்டும்!
மனிதனை மனிதன் சுரண்டும் காட்டுமிராண்டித்தனத்தை மாற்ற வேண்டும். எளியவரை வலியவர் ஆளும் போக்கை மாற்ற வேண்டும். ஏழையின் வறுமையில் பணம் சேர்க்கும் பணப்பேய்களை நாம் மாற்ற வேண்டும். பக்தியின் பேரால் பலவீனத்தில் உழலும் பாமரனை ஏமாற்றும் சமயவாதிகளை மாற்றவேண்டும்.ஆம், அதிகாரவர்க்கத்தையும் மாற்றவேண்டும். ம்ம்ம்ம் கெட்டவரையும்...கேடுகெட்டவரையும் மாற்றவேண்டும்.

ஏன் பொல்லாத கடவுளையும் மாற்ற வேண்டும்! உண்மைதான் ஏழைக்கு ஒரு நியாயம் பணக்காரனுக்கு ஒரு நியாயம் எனும் பாகுபாடு கொண்ட கடவுளையும் நாம் மாற்ற வேண்டும்.

முதலில் நாம் மாறாமல், எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. மேய்ப்பானுடன் பயணிக்கும் செம்மறிகளாய் அன்றாட வாழ்வில் பயணிக்கும் நாம் முதலில் மாற வேண்டும். இதுதான், இத்தருணத்தில் நாம் செய்யவேண்டியது.

சட்டத்தொழில்தான் தன் வாழ்க்கை என்று காந்தி எண்ணியிருந்தால், தேசத்தந்தை எங்கே? பணமும் ஆடம்பர வாழ்வும் தான் வாழ்க்கை என்றெண்ணியிருந்தால் நேரு பெருமகனார் எங்கே? வாழ்க்கையை நொடிப் பொழுதில் தூக்கி எறிந்து விட்டு சரித்திரத்திலும் சாதனையிலும் இடம் பிடித்தவர்கள் எத்தனை பேர்? அது ஒரு நீண்ட பட்டியல்.

A.Pageerathan 

1 comment:

  1. நல்ல ஆரோக்கியமான சிந்தனைகளை முன் கொணர்ந்த நண்பருக்கு நன்றிகள். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். சிறந்த முன்னோடியான எண்ணங்கள் உள்ளபோதுதான் நம் வாழ்வும் சமுதாய முனேற்றமும் சிறக்கும். தொடரட்டும் நல்ல வாதங்கள் மலரட்டும் தமிழன் வாழ்வு.

    நன்றிகளுடன்
    இரா.கபிலன்

    ReplyDelete